சிறுவர் இல்லம் மீது மின்னல் வீழ்ந்தது! 15 சிறுமிகள் உயிர் தப்பினர்!


மன்னார் மாவட்டத்தில் பெற்றாப் பகுதியில் அமைந்துள்ள வெற்றியின் நல் நம்பிக்கை என அழைக்கப்படும் சிறுவர் இல்லத்தின் மீது மின்னல் விழுந்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மலை மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் தீ பற்றி எரிந்துள்ளது. மின்னல் வீழ்ந்ததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அங்கு தீ பற்றியதை அடுத்து 15 சிறுமிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. அத்துடன் மின்சாரசபையினரும் வருவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


No comments