பயணத் தடை! வீதியில் சென்ற இளைஞனுக்கு வாள்வெட்டு!


யாழ்ப்பாணம் தென்மராட்சி கரம்பகம் வீதியில் உந்துருளியில் சென்ற இளைஞனை, உந்துருறுளியில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து வாள் வெட்டியுள்ளது. 

நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அதில் கையில் காயமடைந்த இளைஞன் மோட்டார் உந்துருறுளியை வீதியில் கைவிட்டு விட்டு அபாய குரல் எழுப்பியவாறு தப்பியோடியுள்ளார். அதனை அடுத்து தாக்குதலாளிகள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றனர். 

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

No comments