வாழும் வீரர் சாம்: பீ.சீ.ஆர் வாங்க தெண்டல்!

 

திருகோணமலையை கொரோனா உக்கிரமாக தாக்கிவரும் நிலையில் கூட்டமைப்பின் வாழ்நாள் தலைவர் இரா.சம்பந்தனை ஜந்துவருடங்களிற்கொருமுறை நாடாளுமன்றிற்கு தெரிவு செய்து நாடாளுமன்றிற்கு அனுப்பிய திருமலை மக்கள் ஒரு பீ.சீ.ஆர்  பரிசோதனை இயந்திரத்திற்கு  தெண்ட தொடங்கியுள்ளனர். 

திருமலை நகரமும் சூழலும் பிரதேசசபையினால் முன்னெடுக்கப்படும் திருகோணமலைக்கான பீ.சீ.ஆர் இயந்திரம் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டிற்கு 5.5மில்லியன்(55லட்சம்) ரூபாய்கள் தேவையாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பிரதேசசபை நிதியில் 2மில்லியன்களும், சபையின் கீழ் செயற்படுகின்ற சங்கங்களிடம் இருந்து 1மில்லியனுமாக 3மில்லியன் ரூபாய்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகள், உற்பத்தியாளர்கள், தனவந்தர்கள்,  முதலீட்டாளர்களிடமும் உதவி கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சில சபை உறுப்பினர்களின் மாதாந்த கொடுப்பனவுகளையும் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இவ் மக்கள் நலச்செயற்பாட்டில் பொதுமக்கள், புலம்பெயர்தேச உறவுகள், சமூக நலன் விரும்பிகளின் பங்களிப்பினையும் எதிர்பார்த்து நிற்பதாக பிரதேசசபை அறிவித்துள்ளது.


No comments