பயங்கரவாதி,மரணதண்டனை கைதியென நாடாளுமன்றம்!



பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர், மரணதண்டனைக் கைதியென இலங்கை நாடாளுமன்று இன்றுகலகலப்பாகியுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், இன்று (04) பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொண்டுள்ளார்.

கொவிட்19 அவசரகால நிலைமை தொடர்பான முழுநாள் விவாதம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பாராளுமன்றில் நடைபெறுகின்றது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டை சி.ஐ.டியினர் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அதிகாலையில் பயங்கரவாதத் தடைச் சடடத்தின் கீழ் கைது செய்திருந்ததோடு, அவரை 90 நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களுக்கு அமைய, சபை அமர்வுகளில் ரிஷாட் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், இன்று நடைபெறும் சபை அமர்வில் ரிஷாட் கலந்துக்கொண்டுள்ளார்.

இதற்காக இன்று காலை 9.30 மணியளவில் ரிஷாட் பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் அழைத்து வரப்பட்டார்.

இதேவேளை மரணதண்டனைக் கைதியான பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவும் இன்றைய அமர்வில் கலந்துகொள்வதற்காக புதிய மகசின் சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தார்.


No comments