திருமலைக்கு மகிந்தவின் பி.சி.ஆர்:யாழில் நாமல்!

 


கொரோனா இலங்கையில் அரசியலாக மாறியிருக்கின்ற நிலையில் வாழும் வீரர் இரா.சம்பந்தனனின் கோரிக்கையை ஏற்று திருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைக்கநடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சஷ உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனை கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிட காத்;திருப்பவருமாக அரிய நேத்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு பி.சி.ஆர் இயந்திரமொன்றை பெற்றுக்கொள்ள தெண்டலில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்கள் அம்பலப்படுத்திய நிலையில் வாழும் வீரர் மகிந்தவிடம் இலவசமாக அதனை கோரி பெற்றுள்ளார்.

எனினுனும் அது எப்போது திருகோணமலையை வந்தடையுமென்பது தெரியவில்ரை.

இதனிடையே யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைக் காலை 8 மணிக்கு பொதுமக்களுக்கு கொவிட்-19  ; தடுப்பூசி  ஏற்றும் பணி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதனை தொடக்கி வைக்க நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகின்றார்.

நாமல் ராஜபக்ச வருகை தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஊடகங்களிற்கு அறிவித்துள்ளார். 

முதல் கட்டமாக அதிக தொற்றளர்கள் இணங்காணபட்ட பகுதிகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தட்டுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக என மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். 
No comments