ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்!அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவத்தொடங்கியத்தை அடுத்து தற்காலிமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐயின் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 20-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் 9ம் திகதி தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இறுதிப்போட்டி மே 30ம் திகதி நடைபெறுவதாக இருந்தது.

இதனிடையே ஐபிஎல் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில் டெல்லி அணியின் அமித் மிஸ்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து கொல்கத்தா அணியை சேர்ந்த மேலும் 2 வீரர்களுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

சென்னை அணியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் அவரது உதவியாளர் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் விரித்திமான் சஹாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments