காட்டிக்கொடுக்கும் முகநூல் புகைப்படங்கள்!


கொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடிய சுமார் 15 பேர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் இன்று வடமராட்சி அத்தாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கோவிட் 19 கட்டுப்பாடுகளை மீறி அத்தாய் பகுதியில் பிறந்த நாள் நிகழ்வு நடைபெறுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்ப்பட்டது. இதனை ஊர்ஜிதப்படுத்த கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நெல்லியடி பொலீஸார் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளனர். 

அங்கு பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டோர் தப்பி சென்றுள்ளனர்.  இதனால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டு சுமார் 15 பேர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வலிகாமத்தில் ஆலயத்திருவிழாவொன்றை நடத்தி பின்னர் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட நிலையில் அண்மையில் அகப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments