மின்னல் தாக்கி மீனவர் பலி:மேலுமொருவர் படுகாயம்!கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருதில் இருந்து கடந்த புதன்கிழமை (28) மாலை மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்களில் நேற்று (30) இருவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த அன்ஸார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் இக்பால் (வயது-42) மற்றும் எம்.எஸ். அர்சாத் (வயது-35) ஆகியோரே மின்னலுக்கு இலக்காகி மரணித்துள்ளதுடன் இவர்களின் ஜனாஸாக்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்த இப்ராஹிம் மன்சூர் (வயது- 43) (மரணித்த இப்ராஹிம் இக்பாலின் சகோதரர்) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments