ஆகஸ்ட் மாதம் கொரானா இல்லாத நாடாக பிரித்தானியா இருக்கும் - கிளைவ் டிக்ஸ்


பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு என்பது ஆகஸ்ட் மாதத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும் என அந்நாட்டின் தடுப்பூசி பணிக்குழு தலைவர் கிளைவ் டிக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரசின் 2வது அலை உலுக்கி எடுத்தது. இதையடுத்து, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த பிரித்தானியா  தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்தியது. 

குறிப்பாக மற்ற நாடுகளைக் காட்டிலும் கொரோனா தடுப்பூசி பணிகள் மிக தீவிரமாக நடத்தப்படுகிறது. வரும் ஜூலை மாத இறுதியில் பிரிட்டன் நாட்டிலுள்ள அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டிருக்கும் என அந்நாட்டின் தடுப்பூசி பணிக்குழு  தலைவர் கிளைவ் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வகைகளுக்கு எதிராகவும் தடுப்பூசி செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சுமார் 67.61 மில்லின் மக்கள் தொகையைக் கொண்ட பிரித்தானியாவில் தற்போது வரை 50 மில்லியன் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிகளை விரைவாக முடிப்பதன் மூலம், வரும் ஆகஸ்ட் மாதம் கொரோனா ஆபத்து இல்லாத நாடாகப் பிரித்தானியா மாறும் என கிளைவ் டிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments