சுன்னாகத்தில் எரியுண்ட சடலம்!

 


யாழ்.சுன்னாகம் கொத்தியாலடி ஞானவைரவர் ஆலயத்தின் பின்புறமாக எரிந்த நிலையில் இனம்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை(20) காலை கண்டறியப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments