யாழ்ப்பாண குடிமகன்களிற்கு(?) பேரிடி!யாழ்ப்பாணத்திலுள்ள மதுபானசாலைகள் மீளவும் அறிவிக்கும் வரையிலும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை காவல்துறையும் மதுவரி திணைக்களமும் கொரோனாவிற்குள்ளும் கல்லா கட்டிவருகின்ற நிலையில் சட்டவிரோத மதுபான விற்பனை யாழில் கொடிகட்டி பறந்துவருகின்றது.

இந்நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாகவே சீல் வைப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில், மதுபானசாலைகள் உரிமையாளர்கள், மிகவும் சூட்சுமமான  முறையில் ஆகக் கூடுதலான விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்துவருகின்றனர் .

அதனையடுத்து எடுக்கப்பட்ட பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கையாகவே மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது 


No comments