எழுதுமட்டுவாளில் விபத்து! 8 பேர் காயம்!


யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள சோதனை சாவடிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை  கன்ரர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 08 பேர் காயமடைந்துள்ளனர் . 

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சோதனை சாவடிக்கு அருகில் கன்ரர் வாகனத்தை சடுதியாக நிறுத்த முற்பட்ட வேளையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


இதேவேளை, குறித்த சோதனை சாவடியை இரவு நேரங்களில் அடையாளப்படுத்தும் முகமான மின் குமிழ்கள் ஒளிர விடப்படல் போன்றவை உரியமுறையில் செய்யப்படவில்லை என பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன.

குறித்த சோதனை சாவடியுடன் கூட வாகனங்கள் மோதி விபத்துக்கள் இடம்பெற்ற பின்னரும் காவல்துறை உரிய நடவடிக்கைள் எடுக்காது அசமந்தமாக செயற்படுவது குறித்தும் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments