இங்கிலாந்தில் ஹிஜாபி அணிந்த முதலாவது பெண் தீயணைப்பு வீரர்


இங்கிலாந்தில் ஹிஜாபி அணிந்த முதலாவது பெண் தீயணைப்பு வீரர் என்ற பெருமையை நொட்டிங்ஹாமில் உள்ள அஸ்லியைச் சேர்ந்த 27 வயதான யூரோசா அர்ஷித் (Uroosa Arshid) பெற்றுள்ளார்.

இது குறித்து உரூசா அர்ஷித் தெரிவிக்கையில்:-

தீயணைப்பு வீரர்கள் என்றால் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள். என்னைப் போன்றவர்கள் பார்க்கும் போது அவர்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைகிறார்கள்.


அர்ஷித் நொட்டிங்ஹாமில் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையில் பணியாற்றுகிறார். தனது ஒக்ஸிஜன் முகமூடியின் உள்ளே அணிய ஒரு சிறப்பு ஹிஜாப்பைப் பயன்படுத்துகிறார். 

உரூசா அஷித்தின் இப்பணி ஏனைய இளம் முஸ்லீம் பெண்கள் முன்னுதாரமாகவும் ஊக்கமளிப்பதாகவும் நம்பலாம்.


இங்கிலாந்தின் முதல் ஹிஜாபி தீயணைப்பு வீரர் எங்களிடம் இருப்பதாகக் கூற முடிந்ததற்கு நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம் என தீணைப்பு பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

தீயணைப்பு வீரர்கள் தடைகளை உடைப்பதில் புதியவர்கள் அல்ல, உரூசாவும் வேறுபட்டவர் அல்ல. மேலும் பெண் முஸ்லீம் தீயணைப்பு வீரர்கள் சேவையில் சேர இவரது பணி வழி வகுத்தது என்றார்.


உரூசாவும்  தனது சக வீரர்களைப்  போலவே, ஒரு உயர் பயிற்சி பெற்ற நிபுணர். அவர் மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக தன்னைத்தானே ஆபத்தில் எதிர்நோக்குவார் என்றார்.

No comments