மின்சார மகிழுந்தை அறிமுகம் செய்தது குவாய் நிறுவனம்

சீனாவின் புகழ் பெற்ற ஹூவாய் (Huawei )நிறுவனம் SERES SF5 என்ற அதி நவீன புதிய மின்சார மகிழுந்தை அறிமுகம் செய்துள்ளது.அந்நாட்டின் வர்த்தக மையமான ஷாங்காய் நகரில் நடைபெற்ற மகிழுந்துக் கண்காட்சியில் புதிதாக அறிமுகப்பட்டுத்தப்பட்டு உள்ள 3 வகையான மகிழுந்துகள்  வைக்கப்பட்டிருந்தன.

33,000 தொடக்கம் 38,000 அமெரிக்க டொலர்கள் வரை  இந்த மகிழுந்துகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த 3 வகை கார்களும் விற்பனைக்கு வரும் என கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments