இஸ்ரேல் மத நிகழ்வில் 44 பேர் பலி! 150 பேர் காயம்!


இஸ்ரேலின் வடகிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மத விழாவில் ஏற்பட்ட சன நொிசலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 150க்கு மேற்பட்டோர்  காயமடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் மெரோன் மலையின் அடிவாரத்தில் நடைபெறும் லாக் பி'ஓமர் திருவிழாவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 38 போின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

மலையில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை இருந்தனர் என்றும் ஒரு சிறிய பகுதியில் திரளான மக்கள் கூடியிருந்தனர் என்றும் கூறப்படுகிறது.  ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது மற்றொருவர் விழுந்ததில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றும் கூறப்படுகிறது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு "பாரிய பேரழிவு" என்று வர்ணித்ததோடு, உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.

பல்லாயிரக்கணக்கான ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இஸ்ரேல் நாட்டில் 2வது நூற்றாண்டில் வாழ்ந்த யூத மத துறவி ரபி சிமோன் பார் யோச்சாய்.  இவரது மறைவை நினைவுகூரும் வகையில் ‘லேக் போமர்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மத நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றமை நினைவூட்டத்தக்கது.




No comments