தந்தையின் உந்துருறுளி பிள்ளையின் உயிரை எடுத்தது


சாவகச்சேரி , சந்திரபுறம் - மட்டுவில் பிரதேசத்தில் தந்தையின் உந்துருறுளி ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. 

நேற்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் தந்தை ஒருவர் அவரது உந்துரு சாவியுடன் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இதன் போது குறித்த தந்தையின் 10 வயதுடைய மகன் உந்துருறுளியை செலுத்த முற்பட்டுள்ளார்.

இதன் போது எதிரில் இருந்த ஒன்றரை வயது குழந்தை மீது உந்துருறுளி மோதி படுகாயமடைந்த அக்குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளன. எனவே வாகனங்களை நிறுத்தி வைக்கும் போது பெற்றோர்  மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments