யாழ்.போதனாவைத்தியாசாலையில் சிறீதரன்,சுமந்திரன்!தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு குடும்பங்கள் சகிதம் யாழில் தங்கியிருந்த சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பல இடங்களிலும் புத்தாண்டு பொங்கலில் நேற்று பங்கெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததாக அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

யாழ்  போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  யமுனாநந்தா மற்றும் வைத்திய  வைத்திய நிபுணர்களுடன்  கலந்துரையாடியதோடு வைத்தியசாலையில்தற்போது நிலவும் ஆளணி பற்றாக்குறை, வைத்திய உபகரண  குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வைத்திய சாலை விடுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

No comments