யாழில் அரச அலுவலகங்கள் மூடல்!யாழ்ப்பாணம் வலயக் கல்வித் திணைக்களத்தின் நிதிப்பிரிவு மற்றும் வடமாகாண பிரதிப்பிரதம செயலாளர்-திட்டமிடல் பிரிவின் ஒரு பகுதியென்பவை முடக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் கணக்கு கிளையில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கணக்கு கிளை இழுத்து மூடப்பட்டது.

இதனிடையே திட்டமிடல் பிரிவிற்கு குறித்த உத்தியோகத்தர் இடமாற்றத்தினில் வந்திருந்த நிலையில் கைதடியிலுள்ள அவ்வலுவலகமும் மூடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கைதடியிலுள்ள மாகாணசபை தலைமையகத்திலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு நேற்று முன் தினம் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வலயக் கல்வித் திணைக்களத்தின் நிதிப்பிரிவு முழுமையாக முடக்கப்பட்டது.

நிதிப் பிரிவில் பணியாற்றும் 17  உத்தியோகத்தர்களும் சுய  தனிமைப்படுத்தளிற்கு உட்படுத்தப்பட்டனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த்உத்தியோகத்தரது மாமனாரிற்கு கடந்த வெள்ளிக் கிழமை பெற்ற மாதிரியில் கொரோனா உறுதி செய்யப்பட்டதனையடுத்து உத்தியோகத்தர் கடந்த சனிக் கிழமை முதல் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டு புதன் கிழமை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது உத்தியோகத்தருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம்  சுகாதார வைத்திய அதிகாரியின் பெயரில் 17 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களிற்கான பரிசோதனை எதிர் வரும் 2ஆம் திகதி மேற்கொண்டு அதற்கமைய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.


No comments