மிக அரிதான அளவே பக்கவிளைக் கொண்டது அஷ்ரா சினோகா தடுப்பூசி!
அஷ்ரா சினேகா (AstraZeneca) தடுப்பூசியின் மிக அரிதான பக்கவிளைவாக இரத்தக் கட்டிகள் ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய மருந்துகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்தகைய சம்பவங்களில் பெரும்பகுதி 60 வயதிற்குக் கீழ் உள்ள பெண்களிடம் கண்டறியப்பட்டன.
மூளையில் ஏற்படும் இரத்தக் கட்டிகளுக்கும் அஷ்ரா சினோகா தடுப்பூசிக்கும் எந்த அளவிற்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்து வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இருப்பினும், தடுப்பூசியின் அபாயங்களை விட நன்மைகள் அதிகம் என்று ஆணையம் வலியுறுத்துகிறது.
இத்தாலியும் ஸ்பெயினும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே அஷ்ரா சினோகா தடுப்புமருந்தைப் போடவுள்ளன.
ஜெர்மனி, முதலில் அஷ்ரா சினோகா தடுப்பூசியைப் போட்ட பிறகு, இரண்டாவது முறை வேறு நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியைப் போட பரிந்துரைத்துள்ளது.
Post a Comment