சீனா இலங்கையின் நட்பு நாடாகும்?


சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe, தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை சீனாவுடன் இலங்கை 500 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளது. இந்த கடன் கடந்த ஆண்டு ஒரு பில்லியன் டொலரின் மற்றொரு பகுதியாகும் முதல் கட்டமாக 500 மில்லியன் டொலர்கள் கடந்த ஆண்டு விடுக்கப்பட்டது என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 

 சீனா இலங்கையின் நட்பு நாடாகும் எங்கள் நட்பின் ஆழத்தை பிரதிபலிக்கும் வகையில்  கடினமான சவால்களை சமாளிக்க எப்போதும் சீனா உதவி செய்வதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர்  பாலித கோஹேணா தெரிவித்துள்ளார். 

கொவிட் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை மீட்சி பெற  உதவும் என  இலங்கை தூதுவர்  பாலித கோஹேணா தெரிவித்துள்ளார்

No comments