முன்னணி உறுப்பினர் மீது தாக்குதல்!சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் உறுப்பினர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரான இ.யோகேஸ்வரன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். 

நேற்றைய தினம் நாவற்குழி பகுதியில்  வீடொன்றினுள் புகுந்த திருட்டுக்கும்பல் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடி சென்றிருந்தன. 

இது தொடர்பில் தகவல் அறிந்த உறுப்பினர் உள்ளிட்ட இளைஞர்கள் விசாரணைகளை முன்னெடுத்து 12 மணி நேரத்தில் திருட்டு கும்பலை அடையாளம் கண்டு , அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தத்துடன் , களவாட பட்ட பொருட்களையும் மீட்டிருந்தனர். 

இந்நிலையிலையே குறித்த உறுப்பினர் மீது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

No comments