தமிழ் தேசியத்தை மத,சாதிய மோதல்களால் சிதைக்க முடியாது!


மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு மதம் தாண்டி தமிழ் மக்கள் அஞ்சலித்துவருவது அனைத்து தரப்பிடையேயும் நம்பிக்கையினை தோற்றுவித்துள்ளது.

2009 பின்னராக மத மோதல்களை,சாதிய மோதல்களை தாயகத்தில் தோற்றுவிக்க உளவு கட்டமைப்புக்கள் பலவும் போராடிவருகின்றன.

இந்நிலையில் 

குறிப்பாக ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு மதங்கள் தாண்டி பொத்துவில் முதல் பொலிகண்டி பேரியக்க தலைவர்கள் திரண்டு வந்து அஞ்சலித்துள்ளனர்.இதனிடையே புலம்பெயர் மத அமைப்புக்களும் தமது அஞ்சலிகளை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு தெரிவித்துவருகின்றன.


இது தமிழ் தேசியத்தை எந்தவொரு சக்தியாலும் மத மோதல்களை,சாதிய மோதல்களை தாயகத்தில் தோற்றுவிப்பதன் மூலம் சிதைக்க முடியாதென்பதை ஆணித்தரமாக சொல்லி சென்றுள்ளது.
No comments