கற்கோவளம் மீனவர்களை காணோம்!கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (07) படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும் நேற்று(08) காலை 8 மணிக்கு கரை திரும்பவேண்டிய நிலையில் இரவு வரை தொடர்புகளின்றி உள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (வயது-47), கதிர்காமு சோதிலிங்கம் (வயது -47) மற்றும் க.தவச்செல்வம் (வயது-40) ஆகிய மூவரையே காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments