பின்னடித்த வைகோ! இழுத்துப்பிடித்த ஸ்டாலின்!


தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மார்ச் 28 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அதில் மதிமுக பொதுச் செயலாளர் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல்கள் வந்த நிலையில்... இன்று மதிமுக வெளியிட்ட அறிவிப்பில், ‘திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைகோ கலந்துகொள்வார்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 28 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பத்து நாட்களுக்கு முன்பே திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தேதி வாங்கிவிட்டார். அதனால் அந்த தேதியில் வைகோவால் சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. வைகோவுக்கு பதிலாக மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி கலந்துகொள்வார் என்று மதிமுக வட்டாரத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேசிய அளவிலான தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ளும் கூட்டத்தில் கூட்டணியின் எல்லா கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புவதாகவும், தேவையற்ற சலசலப்புகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் வைகோவுக்கு திமுக சார்பில் தகவல் அனுப்பப்பட்டது. இதில் தன் தலை உருளுவதால் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் திமுக தலைமையிடம், ‘நான் தான் வைகோவிடம் தேதி வாங்கினேன். பிரச்சாரத்தை வேறு தேதியில் வைத்துக்கொள்ளலாம்’என்று தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழின படுகொலைக் கூட்டு குற்றவாளியாகிய காங்கிரசைநாம்தமிழர் கட்சியும் தமிழ்தேசிய இயக்கங்களும்தேர்தல் காலத்தில் கடுமையாக தாக்கிவரும் நிலையிலையே ஈழம் தமிளினப்படுகொலைக்கு நீதி , ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என முழங்கிவரும் வைகோ , ராகுல் காந்தியின் கூட்டத்தில் பங்கேற்க பின்னடிக்க காரணம் என மாதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது , எனவேதான் வைகோ பின்னடித்ததாகவும் அனால் ஸ்டாலின் எப்படியாவது வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததால் இப்போது வைக்கோ ஒத்துகொண்டடுள்ளதாக மதிமுக கட்சியினர் ஆதங்க[ப்படுகின்றனர்.

No comments