விதைத்த வினை திரும்புகின்றது?


கோத்தா அரசை கதிரையிலேற்ற பாடுபட்ட தீவிர பௌத்த அமைப்புக்கள் தற்போது கோத்தாவிற்கு எதிராக திசைதிரும்பிவருகின்றன.

இனி கடுமையான நடவடிக்கைகளை நாடுதழுவிய ரீதியில் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து முன்னெடுப்போம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரும் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆரம்பகால செயற்பாடுகள், விசாரணைகள் சிறந்த முறையில் இடம்பெற்றன.ஆனால் ஆணைக்குழுவின் செயற்பாட்டின் இறுதி பகுதி அரசியல்மயப்படுத்தப்பட்டன.தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏதும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை. மாறாக தனிப்பட்ட முரண்பாடுகளுக்கு பழி தீர்க்கும் ஒரு களமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு செயற்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பௌத்த அமைப்புக்களை தடை செய்யும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் வரலாற்று ரீதியில். இடம்பெற்றுள்ளன. அறிக்கைகளுக்கு பௌத்த அமைப்புக்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாதென்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டில் இனவாதத்தை தோற்றுவிக்கும் வகையில் பௌத்த அமைப்புக்கள் ஒருபோதும் செயற்படவில்லை.பௌத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை இனவாத செயற்பாடு என குறிப்பிட முடியாது.

மத கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 


No comments