பதுக்கிய வெளிநாட்டு சொத்தா காரணம்!




வெளிநாட்டில் பதுக்கப்பட்ட புலிகளது பணத்தை வெள்ளையாக்கி கொண்டு வந்த விவகாரம் தொடர்பில் விசேட அதிரடி படையால் ரியூப் தமிழ் காரியாலயம் சுற்றிவளைப்பு பணிப்பாளர் உட்பட பணியாளர் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் ரியூப் தமிழ் காரியாலயம் சுற்றி வளைக்கப்பட்டது.

ரியூப் தமிழ் பணிப்பாளர் டிவனியா, தமிழ் கொடி  பணிப்பாளர் விமல் மற்றும் அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரியூப் தமிழின் உடமைகளையும் எடுத்து சென்றுள்ளனர். கணனி உட்பட ரியூப் தமிழின் ஆவணங்கள்  பலவற்றையும் எடுத்து சென்றுள்ளனர்..

தற்பொழுது இலங்கை காரியாலயம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம்,அதனை முன்னிறுத்திய பிரச்சாரம் என்பவற்றை முன்னெடுத்தமையாலேயே கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் அதிரடிப்படை சகிதம் கைதினை அரங்கேற்றியுள்ளனர்.

முன்னதாக கைதை தவிர்க்க நாமல் ராஜபக்ஸவுடன் டீல் பேசப்பட்டு இராணுவ தளபதி சவேந்திரசில்வா வரை சந்திப்பு நடந்த போதும் தற்போது கைது அரங்கேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments