ஆவா அருணை சந்திக்க அமைச்சர் யாழ்.வருகை?அங்கயன் மற்றும் டக்ளஸை புறந்தள்ளி புதிய இளம் தலைமையொன்றை கட்டியெழுப்ப கோத்தா உத்தரவிட்டுள்ளார்.இதன் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டு வரும் ஆவா குழுவிற்கு யாழ்ப்பாண சிவில் அமைப்பு மையமென பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குறித்த குழு பேரில் சிங்கள அமைச்சர்களை சந்தித்து திரிபுபடுத்தப்பட்ட கதைகளை அரசே அவிழ்த்தும் விட தொடங்கியுள்ளது.

இதன் புதிய கதையாக தொல்பொருள் இடங்கள் குறித்து யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களிடையே தவறான கருத்தை வழிநடத்த சில தமிழ் அரசியல்வாதிகள் செயல்படுவதாக யாழ்ப்பாண சிவில் அமைப்பு மையத்தின் அழைப்பாளர்(?) என சொல்லிக்கொள்ளும் அருண் சித்தார்த் என்பவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்த அரசாங்கப் படைகள் வலுக்கட்டாயமாக செயல்பட்டு வருவதாகவும், தவறான பிரச்சாரங்களை பரப்புவதாகவும் குறிப்பிட்டார்.

அருண் தேசிய பாரம்பரிய, கச்சேரி கலை மற்றும் ஊரக கலைஞர் ஊக்குவிப்பு அமைச்சர் விதுரா விக்ரமநாயக்க இடையே நடந்த சந்திப்பின் போது இதைக் குறிப்பிட்டதாக அமைச்சரான விதுரா விக்ரமநாயக்க தானே செய்தி பகிர்ந்துள்ளார்.

அருண், யாழ்ப்பாணத்திற்கு வரும் கட்சிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி உண்மையை விளக்குமாறு அமைச்சரிடம் கேட்டார்.

அருணின் வேண்டுகோளுக்கு மகிழ்ச்சி தெரிவித்த அமைச்சர், விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாட யாழ்ப்பாணத்திற்கு வருவார் என்று கூறினார்.


No comments