உருவப்படும் தமிழர் தாயகம்!கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு அரச நிருவாக கட்டமைப்பை சிங்களமயப்படுத்தும் வேலைகள் தொடர்ச்சியாக நடை பெற்று வருவதை அம்பலப்படுத்தியுள்ளனர் செயற்பாட்டாளர்கள்.

கோத்தபாயா ராஜபக்சே நிருவாகம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் வெளியிடப்பட்டு இருக்கும் இலங்கையின் இலங்கை நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலான நேர்முக தேர்வு பட்டியலில் முழுக்க முழுக்க சிங்கள பெரும்பான்மையான சமூகத்தினர் மட்டும் உள்ளடக்கப்படிருக்கின்றார்கள்.

இதேவேளை நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெ்ற கணக்காளர் தேர்வில் அதிகளவு தமிழர்கள் (75 வரை) சித்தியடைந்தமையால் பரீட்சை இரத்து செய்யப்பட்டு மீள நடைபெற்று ,99 வீத சிங்கள இளைஞர்கள் மூலம் அவ் வெற்றிடங்கள் நிரப்பபட்டன

மறுபுறம் மகிந்த ராஜபக்சே ஆட்சி காலம் முதல்  கிழக்கு மாகாணசபை முழுமையாக நிருவாகம்  சிங்கள மயப்படுத்த பட்டு வருகின்றது . இந்த நடைமுறைகள் நல்லாட்சி அரசாங்க காலத்திலும் தற்போதைய கோத்தபாயா ராஜபக்சே ஆட்சி காலத்திலும் எந்த தளர்வும் இன்றி  பின்பற்றப்படுகின்றன . 

குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக ஜே.எஸ்.டி.எம் அசங்க அபேயவர்த்தன அவர்களும் கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் தலைவராக ஆர்.எம்.டி.பி. மீகாஸ்முல்லா அவர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

இது மட்டுமில்லாது கிழக்கு மாகாண சபையின் செயலாளராக துசித வன்னியசிங்கே நியமிக்கப்பட்டு இருக்கிறார்

அத்தோடு மாகாணசபையின் பிரதி பிரதம செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திசநாயக்க அவர்களும்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக ஐ.கே.ஜி.முத்து பண்டா அவர்களும் பதவி வகிக்கிறார்கள்

கிழக்கு மாகாணசபையின் காணி நிருவாக திணைக்களத்தின் தலைவர பதவிக்கு எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திசநாயக்க நியமிக்கப்பட்டு இருக்கிறார்

13 ஆம் திருத்தத்தின் கீழ் மாகாணத்தின் மேற்குறிப்பிட்ட பிரதம செயலாளர் போன்றோர் (மத்திய) பொதுச் சேவை ஆணைக்குழுவின் அதிகார எல்லைக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்

ஆகவே மாகாணப் பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் மாகாணசபை தேர்தலில் தெரிவு செய்யப்படும் முதலமைச்சருக்கு (தமிழ் அல்லது முஸ்லீம் முதலமைச்சர் ) இல்லை .

இதுமட்டும் இன்றி மட்டுமன்றி முதலமைச்சரின் செயலாளர், அமைச்சர்களின் செயலாளர்கள் எல்லோருமே இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளாக இருக்கிறார்கள் .

இவர்கள் மீதும் தெரிவு செய்யப்படும் மக்களால் தெரிவு செய்யப்படும் எந்த மாகாண அமைச்சர்களும் அதிகாரம் செலுத்த முடியாது

இது தவிர  கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களின் அரச அதிபர்களாக பல நீண்டகாலமாக சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றார்கள்.அரசாங்க அதிபர்கள் கூட பொறுப்புக் கூறுவது முதலமைச்சரிடம் அல்ல. அவர்களைக் கட்டுபடுத்துவதும் மத்திய அரசாங்கம் தான் 

தமிழர்கள் அமைச்சுக்கள், இராஜதந்திர சேவைகள் என இலங்கை நிருவாக மட்டத்தின் தலைமை பதவிகளுக்கு நியமிக்கப்படுவது தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வந்து தற்போது  எந்த நிருவாக மட்டத்திலும்  தமிழ் சிறுபான்மையை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments