தமிழ் அதிகாரிகள் இனி இல்லை!



இலங்கையின் அரச நிர்வாக கட்டமைப்பில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையின் மற்றுமொரு வடிவமே SLAS (limited) நேர்முக பரீட்சை வெளியீடு என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அரச நிர்வாக கட்டமைப்பில் பல அரச தொழில் கட்டமைப்புகள் காணப்படுகின்றன. இவற்றில் 90 வீதமானவை சிங்கள சமூகத்திடம் உள்ளதுடன் இனிவரும் காலங்களில் தமிழர்கள் உயரிய பதவிகளுக்கு வரமுடியாதபடி நிர்வாக ரீதியான புறக்கணிப்பு திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றது.

இலங்கையின் முதன்மை சேவையான இலங்கை நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலான நேர்முக தேர்வு பட்டியல் வெளியாகியுள்ளது. இவ் பட்டியலில் முழுக்க முழுக்க சிங்கள பெரும்பான்மையான சமூகத்தினர் மட்டும் உள்ளடக்கப்படிருக்கின்றார்கள். இதனமூலம் திட்டமிடப்பட்ட ஒரு அதிகார சதி உருவாக்கப்பட்டு வருகின்றது.

SLAS பரீட்சையின் பாடத்திட்டம் சிங்கள மாணவர்களுக்கு இலகுவான ஒன்றாக காணப்படுகிறது. ஏனெனில் இலக்கியம். கலை சமூக அண்மைய நிகழ்வுகள் கலைஞர்கள் பெயர்கள் செயல் திட்டங்கள் பெரும்பான்மையான வினாக்கள் சிங்கள மக்களின் அன்றாட நிகழ்வுகளுடன் இயல்பான விடயப்பரப்புகளுள் அமைகின்றன. எனினும் அதையும் தமிழ் மாணவர்கள் இலகுவில் கற்று சித்தி வீதத்தை தக்க வைத்திருந்த நிலை கடந்த காலங்களில் காணப்பட்டது. கடந்த தடவை நடைபெற்ற பரீட்சையில் அதிகளவான தமிழர்கள் சித்தியடைந்த நிலையும். அதற்கு முன்னரான காலங்களில் தமிழரின் பங்கும் ஓரளவு ஏற்றுக்கொள்ள கூடியதாக காணப்பட்டது.

கடந்த வருடம் அதிகம் தமிழர் சித்தியடைந்தமை பேசும் பெருளாகியதுடன் பரீட்சை முடிவுகளை இரத்து செய்யும் அளவுக்கு சென்று பாராளுமன்ற தலையீடுகள் மூலம் தமிழ் பிரதிநிதித்துவம் தக்க வைக்கப்படிருந்தது. இந்நிலையில் இம்முறை அத்தகைய பேசும் பொருளுக்கு கூட இடம் வைக்காத நிலையில் தனி சிங்கள தேர்வாளர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடத்த தடவையும் அதற்கு முன்னரும் முதல் இடங்களை பெற்ற தமிழர்களால் இம்முறை 68 இடங்களுக்குள் வரமுடியாமை ஏதோ ஒரு செய்தியை விட்டுச் செல்கின்றது..

தற்போது உள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளில் கூட தமிழர்களின் முதுமுறை முன்னுக்கு வரமுடியாதளவும் உயர்பதவிகளை அடைய முடியாத அளவும் அடைவு மட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  வெளிநாட்டு கற்கை வாய்ப்புகள் கூட பல தமிழ் அதிகாரிகளுக்கு கிடைப்பதில்லை. 

2017 ஆம் ஆண்டு நடைபெ்ற கணக்காளர் தேர்வில் அதிகளவு தமிழர்கள் (75 வரை) சித்தியடைந்தமையால் பரீட்சை இரத்து செய்யப்பட்டு மீள நடைபெற்று ,99 வீத சிங்களவரினால் அவ் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அம் முடிவுகள் மைத்திரி அரசின் அரசியல் நெருக்கடி அமைந்திருந்த நேரத்தில் மிகவும் பக்காவாக வெளியிடப்பட்டு நியமனம் பெற வழியேற்படுத்தப்பட்டது..

இவ்வாறாக மிகவும் சொற்பமாக தமிழர்களுக்கு கிடைக்கும் அதிகார பணிநிலை வாய்ப்புகள் இனிவரும் காலங்களில் கிடைக்க முடியாதபடி திட்டமிட்ட அடிப்படையில் செயற்பாடு நடந்தேறுகிறது.

திறந்த பலைகலைக்கழக சட்டமாணி கற்கை நுழைவு தேர்வு இம்முறை நடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட உள்ளதுடன் மாவட்ட பிராந்திய அடிப்படை கோட்டா மறுக்கப்பட்டமையால் தமிழர்களுக்கு சட்ட கற்கை வாய்ப்புகளும் கிடைக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது..

பெலீஸ் பதவியணியில் உயர்பதவிகளில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் அறவே இல்லாத நிலை உள்ளது.

தமிழ் மாணவர்கள் என்ன செய்ய முடியும்..?

01. மக்கள் பிரதிநிதிகள் ஊடாக பாதிக்கப்படும் தரப்புக்கான நியமன நடைமுறை ஏற்படுத்த வரியேற்படுத்த வேண்டும்.

02. நீதிமன்ற கட்டளைகள் மூலம் பரீட்சை விடைத்தாள் வெளிப்படைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

03. குழுவாக படித்தல் முறையை உருவாக்கி இப்பரீட்சைகளை உயர்புள்ளி பெற முயற்சிக்க வேண்டும்.

04. இளம் அதிகாரிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை ஏற்படுத்த வழியேற்படுத்த வேண்டும்.

05. தமிழ்தரப்பு உள்ளக அரசியல் நோக்கை அதிகாரிகள் மீது பிரயோகித்து ஊணமுற்ற அதிகாரிகளாக்காது செயற்பட வேண்டும்.

06. உயர் அதிகாரிகள். தூரநோக்கில் செயற்பட வேண்டும்.

இல்லையேல் இன்னும் 30 வருடங்களின் பின் பியோன் உத்தியோகம் கூட தமிழர்களிடம் இருக்காது. 

No comments