மண் மாபியாக்கள் இடையே வாள் வீச்சு! இளைஞன் படுகாயம்!


மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மண் அகழும் மாபியாக்கள் இடையே ஏற்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்துள்ள கித்துள் கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

படுகாமைந்த 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் மட்டக்களப்பு மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம்  மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments