யானையும் தொலைபேசியும் ஒட்டாது!


ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்கான சாத்தியத்தை ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முக்கிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்துள்ளார்.

இதன்போது, இந்த விடயம் குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜயவர்தனவிடம், ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாட வேண்டும் என, ரணில் விக்கிரமசிங்க கூறியதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


.


No comments