கச்சதீவில் திருவிழா இல்லை!


ஏதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் வருடாந்த உற்சவத்தில் இம்முறை பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மீள அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக இலங்கை இந்திய யாத்திரிகர்கள் பங்கெடுக்கின்ற வரலாற்று நிகழ்வாக  கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய உற்சவம் அமைந்துள்ளது.

இருநாட்டு கத்தோலிக்க பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டு  ஆராதனை வழிபாட்டில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கில் இலங்கை இந்திய யாத்திரிகர்கள் பங்கெடுக்கின்ற நிகழ்வாக கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த உற்சவம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments