யாழில் ஏனைய சந்தைகளிலும் ஆய்வு!அச்சுவேலி சந்தை வியாபாரிகள்  நால்வருக்கு  கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஏனைய இடங்களிலும் எழுந்தமாற்றாக சந்தைகளில் சோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே இன்றையதினம் அச்சுவேலி சந்தையில் பொதுமக்கள் வருகை குறைவடைந்துள்ளது.

நேற்றையதினம் சந்தை வியாபாரிகள் நால்வர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்றைய தினம் குறித்த வியாபாரிகளுடன் தொடர்புடையவர்கள் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில்  அச்சுவேலி சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.

குறித்த நான்கு வியாபாரிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சந்தையின் கட்டிட தொகுதியில் ஒரே வரிசையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் எனினும் குறித்த வியாபாரிகளுடன் நேரடியாக தொடர்புடையவர்களுக்கு இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள பட உள்ளதோடு அவர்களோடு நேரடியாக தொடர்பு பட்டவர்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments