முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பு! சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் முற்றுகை


யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதை கண்டித்து இன்று திங்கட்கிழமை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டமொன்று நடைபெற்றது.

இன்று திங்கட்கிழமை காலை போராட்டமானது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டமொன்று  நடைபெற்றது. 

சென்னையில் இலங்கைத் தூதரகம் இருக்கக்கூடாது என இரண்டு மணி நேரம் போராட்டம் நடத்தப்பட்டது.

ஒன்றுகூடலைத் தொடர்ந்து  இலங்கைத் துணைத்தூதரகத்தை முற்றுகையிடுவதற்கு வைகோ தலைமையில் ஏனைய கட்சித் தலைவர்களும் சென்றபோது காவல்துறையினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோரைக் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments