கை கழுவி விடாமல் இந்தியா கண்டிக்கவேண்டும்! நினைவு தூண் தகர்ப்பு குறித்து ராமதாஸ்!


யாழ் பல்கலைக்கழகத்தில்நிறுவியிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் சிங்கள அரசால் தகர்த்து எடுக்கப்பட்டதற்கு தமிழக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூண் இரவோடு இரவாக சிங்கள அரசால் தகர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நினைவுத்தூண் அமைப்பதைக் கூட அனுமதிக்காத ஆட்சியில், ஈழத்தமிழர்கள் எவ்வாறு சம உரிமையுடனும், கவுரவத்துடனும் வாழ முடியும்? என்பதை இந்திய அரசு சிந்திக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டதை இந்தியா கண்டிக்க வேண்டும். ஈழத்தமிழர் விவகாரத்தைக் கைகழுவி விடாமல், அவர்களுக்கு வாழ்வுரிமையை வென்றெடுத்துக் கொடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

No comments