முள்ளிவாய்க்கால் நினைவு தூண் தகர்ப்பு, தமிழக அரசியலில் தாக்கம்!

 


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட
முள்ளிவாய்க்கால் நினைவு தூண், நள்ளிரவில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணைமுதல்வர் ஒ. பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


2009ம் ஆண்டு இறுதிக்கட்ட ஈழப்போரில், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறும் விதமாக, யாழ்ப்பாணம்
பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த
2019ம் ஆண்டு மாணவர்களால் அமைக்கப்பட்டது. இந்நிலையில்,போரில் உயிர்நீத்த தமிழர்களின் அடையாளமாக விளங்கிய
நினைவுத் தூணை இலங்கை அரசு இரவோடு இரவாக ராட்சத
இயந்திரங்களை கொண்டு இடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு
தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர்கள்
போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இந்நிகழ்வுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி
பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் பழனிசாமி,
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில்
இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்
மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக
வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு
இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை
அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும்
கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என
தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தெரிவித்துள்ள தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்

 ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.யாழ் பல்கலைக் கழகத்திலுள்ள  முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை  இடித்துள்ளனர். இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ஈழ மக்களை அரசியல் பிரச்சனையில் தமிழக அதிமுக அரசு என்றுமில்லாதவாறு கவனம் செலுத்தியுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

No comments