வடமராட்சி முடக்கம்:முடிவில்லை?


ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளதனால், தற்போதைய நிலையில் வடமராட்சிப் பிரதேசத்தினை முடக்குவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

சுகாதாரப் பிரிவு அவருடைய தரவுகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்களென்றார்.

அதனுடைய பின்னணி தொடர்பாக ஆராய்ந்த பின்னரே, அதனை முடக்குவதாக இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்க முடியுமெனவும, அவர்; கூறினார்.

எனினும், சுகாதாரப் பிரிவினராலேயே அந்த முடிவு அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில் வடமராட்சிப் பிரதேசத்தினை முடக்குவது தொடர்பில் தீர்மானமில்லை எனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

No comments