பூந்தி விற்றவருக்கு, கொரோனா?


ஆலய நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த மக்களுக்கு, முகக் கவசம் அணியாமல், பூந்தி (இனிப்பு வகை) விற்றவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலி, எல்பிட்டிய-நாகஹதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற ஆலய நிகழ்வின் போதே, மேற்படி வர்த்தகர், பூந்தி விற்றுள்ளார்.

ஊரகஹா பிரதேசத்தில்,  வாராந்த சந்தையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட மேற்படி வர்த்தகர் உள்ளிட்ட பலருக்கு, கடந்த 22ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இவர்களின் பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் (24) கிடைத்ததுடன், இதன்போது பூந்தி விற்றவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, காலி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பூந்தி விற்ற வர்த்தகர், தனக்கு பி.சி.ஆர் அறிக்கை கிடைக்கும் வரையிலும் வாராந்த சந்தைக்குச் சென்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் தெரியவருகின்றது

No comments