ஆராயச்சி மட்டுமே செய்தாராம் அமைச்சர்?

 


தமிழ் மக்களின் மத மற்றும் கலாசார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது.


குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வுப் பணிகள் தொடர்பில் வினவிய போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:


முல்லைத்தீவு பிரதேசத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.


இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை வெளியிடுகின்றனர்.


தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாசார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. இந்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பதால் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன.


தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது.


எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.


பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும்.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணி சுவீகரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும்.


அரசியல் நோககங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

No comments