மஞ்சள் கடத்தினாலும் சிறையாம்?இலங்கையில் தங்கத்திற்கு ஈடான பெறுமதி மிகு பொருளாகியிருக்கின்றது மஞ்சள்.

ஒருபுறம் இந்தியாவிலிருந்து கடல்வழியாக கடத்தப்படுகின்ற மஞ்சள் கடற்படையிடம் அகப்பட்டு கொள்ள இன்னொருபுறம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 15 மில்லியன் மதிப்புள்ள உலர்ந்த மஞ்சள் மாவை இலங்கை சுங்கம் கைப்பற்றியுள்ளது.


கடந்த டிசம்பர் 21 அன்று கோதுமை மாவுடன் ஒரு கொள்கலனில் 7.5 டன் உலர்ந்த மஞ்சள்; கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

இந்த கொள்கலன் மோதரையில் வசிப்பவரால் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவரை கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.


No comments