இலங்கை சுதந்திரதினம்:கரிநாள்?


சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 4 தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கரிநாளாகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்க பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத்தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாளாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக, ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் திரண்டு, இறுக்கமான போராட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

'ஆயிரக்கணக்கில் மக்கள் திரளக்கூடிய விதத்தில் மக்கள் போராட்டம் பொருத்தமாக இருக்கவேண்டும் அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதுவரை முன்னெடுத்த பல செயற்பாடுகளினால் பல வெற்றிகள் கிடைத்துள்ளன. இது போதுமானதல்ல. மேலும், பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்' என்றார்.


No comments