இலங்கையில் கட்டாய ஆயுதப்பயிற்சி?

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில்

சமர்ப்பிப்பதாக இலங்கை  பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்த முன்மொழிவினை எண்ணி எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த தீர்மானம் நாட்டின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பயிற்சி மக்கள் தமது சொந்த காலில் நிற்கவும் தலைமைத்துவ குணங்களை ஊக்குவிக்கவும் ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் நாட்டிற்கு பங்களிக்கவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நடைமுறைகள் பல நாடுகளுக்கு ஒழுக்கத்தை ஏற்படுத்த உதவியுள்ளதுடன, இது இளைஞர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments