விமான நிலையம் திறப்பு:தமிழில் பேசிய ஜெய்சங்கர்?


இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் தமிழில் பேசி கலக்கியுள்ளார்.

வுழமையாக சர்வதேச ராஜதந்திரிகளுடனான சந்திப்பில் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆங்கிலத்தில் பிளந்து கட்ட மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறுமனே வேடிக்கை பார்ப்பது வழமை.

ஆனாலும் தமிழரான  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் தமிழில் பேசி கலக்கியுள்ளார்.

இதனிடையே தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினையான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மீள திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் விரைவில் அது திறக்கப்படும் என அரச தரப்பு தெரிவித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பினரை இந்திய வெளிவிவகார அமைச்சரை நேற்று கொழும்பில் சந்தித்துப் பேசியபோது யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மீளத் திறப்பது குறித்து அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இன்போது கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்வரும் 23 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமும் செயற்பாட்டுக்கு வரும் என அரச தரப்பில் கூறப்பட்டுள்ளதாக கூட்டிக்காட்டினார்.


No comments