கொரோனா தொற்றுடன் நடந்து முடிந்த திருமணம்


ராஜஸ்தானின் பாராவில் உள்ள கெல்வாரா கோவிட் மையத்தில் மணமகள் கொரோனா தொற்றுடன் திருமணம் செய்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தியபோது மணமகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்த தனிப்பட்ட பாதுகாப்பு கவசங்களை அணிந்தவாறு மணமகனும் மணமகளும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வு காணொளியாக சமூக ஊடகங்களில் வெளிவர அது வைரலாகியது.

திருமணத்தில் மணமகன், மணமகள், பூசாரி, மற்றும் ஒருவர் முன்னிலையில் திருமணம் நடந்தது. கொவிட்-19 நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நால்வரும் சுவாசக் கவங்கள், உடல் கவசங்கள், கையுறை என தனிப்பட்ட பாதுகாப்பு கவசங்களை அணிந்தவாறு திருமணம் நடந்து முடிந்துள்ளதுள்ளனர்.


No comments