மீண்டும் புரவிப் புயல்! தமிழகம் , திருகோணமலை பகுதியை கடக்கும்!


 வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானது

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரிகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 400 கிலோமீட்டர் தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது. வரும் இரண்டாம் தேதி மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே வரும் புரெவி மன்னார் வளைகுடாவுக்கு அருகே மூன்றாம் தேதி காலை வரும். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையே நான்காம் தேதி காலை கரையை கடக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 4ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments