நேபாள பூகம்பத்தால் ஆடிப்போன எவெரெஸ்ட்! புதிய உயரம் அறிவிக்க ஏற்ப்பாடு!


உலகின் மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்டின் உயரம் என்ன எனக் கேட்டால் நாம் அனைவரும் 8,848 மீட்டர் என உடனே சொல்லி விடுவோம். ஆனால் நேபாளம் மற்றும் சீன அரசுகளுக்கு இதில் உடன்பாடில்லை.

எனவே எவெரெஸ்டின் உயரம் குறித்து ஒரு வருடமாக அளவீடு நடத்திய பின்னர், நேபாளம் நாளை புதிதாக அளவிடப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளது.

அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் ஒரு அழைப்பை அனுப்பிய கணக்கெடுப்புத் துறை, புதிய உயரத்தை அறிவிக்க திட்டமிடப்பட்ட நிகழ்வு குறித்து முறையான அழைப்பை வெளியிட்டுள்ளது.

“செவ்வாய்க்கிழமை பிற்பகல் எங்கள் அலுவலகத்தில் புதிய உயரத்தை அறிவிக்கும் திட்டத்தை நாங்கள் வழங்கவுள்ளோம். இந்த நடைமுறையில் தீவிரமாக பங்கேற்றவர்களும் இந்நிகழ்ச்சியில் பாராட்டப்பட உள்ளனர்” என்று இமயமலை ஆய்வுத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் சுஷில் நர்சிங் ராஜ்பந்தாரி தெரிவித்தார்.

நேபாளத்தை உலுக்கிய 2015 பூகம்பத்திற்குப் பிறகு 8,848 மீட்டர் உயரம் உண்மையான நீளமாக இருக்காது என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊகங்களுக்குப் பிறகு உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை அளவிட நேபாளம் முயன்றது.

மலையின் உயரத்தை மீண்டும் அளவிட நேபாள அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை நியமிக்கும் அதே வேளையில், சீனாவும் திபெத்திய பக்கத்திலிருந்து உயரத்தை அளவிடும் பணியைத் தொடங்கியது.

பின்னர், 2019’ல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நேபாள பயணத்தின் போது, ​​இரு நாடுகளும் இணைந்து உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை கூட்டாக அறிவிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

முன்னதாக சர்வே ஆப் இந்தியா 1954’இல் அளவிட்ட, 8,848 மீட்டர் என்பதுதான் எவெரெஸ்டின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உயரம் ஆகும்.

No comments