தென்சீனக்கடலில் விரட்டியடிக்கப்பட்டது அமெரிக்கப் போர்க்கப்கப்பல்!


தென் சீனக்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலை விரட்டியடித்ததாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன ராணுவத்தின் தெற்கு பிரிவு படை வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஜான் மெக்கெய்ன் போர்க்கப்பல் சீன அரசாங்கத்தின் அங்கீகாரம் இன்றி சீனாவின் நான்ஷா தீவு அருகே கடலுக்குள் நுழைந்தது. இதனையடுத்து சீன ராணுவ தெற்கு பிரிவு படையின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் அமெரிக்க போர்க்கப்பலை எச்சரித்து விரட்டி அடித்தன” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா தரப்பில் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.No comments