25பேருடன் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்?அரசு ஆதரவு கட்சியினரின் ஏற்பாட்டில் வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

சாதிய அடிப்படையில்அபிவிருத்தியை தடைசெய்யாதே? என கோரி வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில்  அரச ஆதரவு கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் வலி கிழக்கு பிரதேச சபை யினருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.25  ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்கள்.

எனக்கெதிராக பிரதேச சபை முன் ஆர்ப்பாட்டங்களுக்கு அரசியல் முயற்சி இடம்பெறுவதாக தவிசாளர் தியாகராசா நிரோஸ் தெரிவித்துள்ளார்.அதிலும் வெள்ள நிவாரணம் என மக்கள் பல இடங்களிலும் வாகனங்களில் ஏற்றப்படுகின்றனர். அவர்களை அழைத்து வந்து வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கு முன்னராக ஆர்ப்பாட்;டம் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் மேலும் தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments