படையினரது சோத்து பார்சல் அரசியல்!சோத்துப்பார்சல் அரசியல் மூலம் தமிழ் மக்களது மனங்களை வெல்ல இலங்கை படைகள் விடாது போராடிவருகின்றன.

இலங்கை படைகளின் கடந்த கால கொலைகள் மற்றும் வன்முறைகள் என்பது தமிழ் மக்களது மனங்களில் ஊறிபோயுள்ளதொன்று.

ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளம் வரும் போது படையினரது சமையலுடன் தாமும் மக்களின் கஸ்டத்தில் பங்கெடுப்பதாக சோத்து பார்சலுடன் புறப்படுவது அவர்களது வழமையாகும்.

தற்போதும் தமது சோத்துப்பார்சல்களுடன் புறப்பட்டுள்ள படையினர் மக்களிற்கு சோத்து பார்சல் வழங்கி அரசியல் செய்துவருகின்றனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிற்கு ஊடகங்கள் சகிதம் சென்ற படை அதிகாரிகள் ஒரு சில பார்சல்களை வழங்கி அதனை பிரச்சாரப்படுத்தி வருகின்றனர். 


No comments