எல்பிஎல் மைதானத்திற்கு கைதிகள்?


இதுவரை கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பதினொரு கைதிகளில் ஒன்பது பேருக்கு கொரோனா என கண்டறியப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா என தெரியவில்லை. ஆகவே, 800 பேர் இருக்க வேண்டிய சிறை கூடத்தில் 3000 கைதிகள் மிகவும் நெரிசலில் இருந்துள்ளார்கள் என்பது நிரூபணம் ஆகின்றதென அம்பலப்படுத்தியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்.

இந்த நெருக்கடி சூழலில் எல்பிஎல் நடத்தும் அரசாங்கம் ஒரு பெரிய விளையாட்டரங்கை எடுத்து, அதில் கூடாரம் அமைத்து, சுற்றி அதிரடி பொலிஸ் காவல் போட்டு, தடுப்பு காவல் கைதிகளை அங்கு தங்க வைக்கலாமே! அதன்மூலம் சிறை நெருக்கடியை தளர்த்தலாமே! நேற்றிரவு இதை சிங்கள டீவியில் சொன்னேன். மஹர சிறைசாலையில் இருந்த தமது உறவுகளுக்கு என்ன நிகழ்ந்துள்ளது என தெரியாமல், தவிக்கும், நிறைய அப்பாவி சிங்கள பெற்றோர், இன்று காலை என்னை தொலைபேசியில் அழைத்து நன்றி கூறுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


No comments